Designed by Iniyas LTD
நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள கேப்பாபிலவு மக்கள்..
தங்களது நிலத்தை இராணுவம் விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபிலவுமக்கள் நாளை ஆர்ப்பட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.
700 நாட்களை கடந்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் அரசாங்கத்தினால் இதுவரை அவர்களின் கோரிக்கை தீர்த்துவைக்கப்படவில்லை.
இந்நிலையில் நிலமீட்பு போராட்டத்தை தலமை தாங்கி நடத்துபவர்கள் மீது பொய்யான வழக்கை பொலிஸார் பதிவுசெய்துள்ளனர்.
அதற்கமைய நீதிமன்ற அழைப்பாணையை ஏற்று அவர்கள் முல்லைதீவு நீதிமன்றில் இன்று சமூகமளித்திருந்தனர்.
இதன்போது மக்கள் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் பொலிஸார் பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
அதற்கு தமது பாதுகாப்பை கருதியே இந்த வழக்கை தாம் பதிவு செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் எவ்வித இடையூறும் இன்றி மக்களின் போராட்டத்தை தொடர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபிலவு மக்கள் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.