தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வன ஜீவராஜிகள் திணைக்களத்தால் சுவீகரிக்கபடும் வடமராட்சி கிழக்கு – மக்கள் ஆதங்கம்…

வடமராட்சி கிழக்கில் சுமந்திரன் தனது தொடர் அரசியல் பயணத்திற்கான  அத்திவாரத்தை நாட்ட பாடுபட்டுவருகின்றார்.,
இந்நிலையில்  வெற்றிலைக்கேணி முதல் சுண்டிக்குளம் நல்லதண்ணீர் தொடுவாய் வரை யான பகுதியை  வன ஜீவராஜிகள் திணைக்களம்  அபகரித்துள்ளமைக்கு  சுமந்திரன்  ஆதiவை வழங்கிவருவதாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுண்டிக்குளம் சரணாலய விஸ்தரிப்புக்காக வன ஜீவராசிகள் திணைக்களம் மக்களின் காணி களில் எல்லைக்கற்களை நாட்டியுள்ளது.
இதன் கரையோர எல்லையே வெற்றிலைக்கேணியிலி ருந்து சுண்டிக்குளம் நல்லதண்ணீர் தொடுவாய்க்கு சற்று அப்பால்வரை சுவீகரிக்கப்பட்டுள்ளது.
அதோடு தெற்கு பக்கமாக ஆனையிறவு தட்டுவன்கொட்டி போற்ற பிரதேசங்களும் உள்ளடங்குகிறது.
இதேவேளை  வடமராட்சி கிழக்கில் மட்டும் மூன்று கிராம சேவகர் பிரிவுகளான வெற்றி லைகேணி முள்ளியான் கேவில் ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்கலாக  வன ஜீவராஜிகள் திணைக்களம் சுவீகரித்துள்ளது.
இதில் சுமார் 1400 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர்.குறித்த பிரதேசம்  அம் மக்களின் பூர்வீக நிலம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
அங்கு 6000 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களும் வடமரட்சி கிழக்கில் மூன்று பாடசாலைகளும்,
கிளிநொச்சி மாவட்ட கிராமங்களான இயக்கச்சி மற்றும் தட்டுவன் கொட்டி உட்பட ஐந்துக்கு மேற்பட்ட பாடசாலைகளும் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களும்,
பதினைந்துக்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் உட்பட மக்களுடைய சகல உட்கட் டுமானங்களும் இதில்  உள்ளடங்கியுள்ளன.
இந்நிலையில்   தாம் சுண்டிக்குளம் தேசிய பூங்கா திட்டத்தையே எதிர்ப் பதாகவும் இத் தேசிய பூங்கா திட்டத்தினை கைவிட்டு ஆரம்பத்தில் காணப்பட்ட சரணாலயக் காணிகளுக்கு மாத்திரம் எல்லையிடுமாறு மக்கள் கோரி வருகின்றனர்.
ஆரம்பத்தில் சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம் ஆரம்ப காலத்தில் 25ஆயரத்து 550 ஏக்கர் நிலப்­லபரப்பினைக் கொண்டதாகக் காணப்பட்டது. எனினும்   தற்போது சுமார் 48347 ஏக்கர் வரையாக அது  அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போது தேசிய பூங்காவிற்க்காக சுவீகரிக்கப்பட்ட பிரதேசங்களில் இரவோடு இரவாக எல்லைக்கற்கள் நடும் திட்டம் கணிசமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...