Designed by Iniyas LTD
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரின் ஊர்தி விபத்து – இளைஞர் படுகாயம்..
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரின் ஊர்தி விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (08.05.19 ) மதியம் இடம்பெற்றுள்ளது.
படையினர் பயணித்த டிப்பர் வகை ஊர்தி ஒன்றுடன் உந்துருளியில் வேகமாசென்ற இளைஞன் மோதிக்கொண்டு விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த விபத்தின் போது புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய சுந்தலிங்கம் கனிஸ்ரன் என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்