தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சீனா அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தில்

சீன ஜனாதிபதியின் இலங்கைப் பயணத்துக்குச் சற்று முன்னதாக அந்த நாட்டின் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தில், சீனாவிற்குச் சொந்தமான சிஐசிடி இறங்குதுறைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜான்ங்ஜென்ங் 2 என்ற நீர்மூழ்கிக் கப்பலே இவ்வாறு துறைமுகத்திற்குள் நுழைந்துள்ளது.China's submarine

குறிப்பிட்ட நீர்மூழ்கிக்கப்பல் துறைமுகத்திற்குள் நுழைந்த வேளை வெளியே இரு கடற்படை கப்பல்கள் நங்கூரமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நீர்மூழ்கியின் வருகைம் குறித்து இலங்கை கடற்படையினர் அறிந்திருக்கவில்லை என்றும் யுத்த கப்பல்கள் குறித்து இறுதிநேரத்திலேயே அறிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா ஜனாதிபதி தன்னுடைய விஜயத்திற்கு முன்னதாக பாரிய கடற்படைய கலங்களை இலங்கைக்கு அனுப்பி வைத்ததன் மூலமாக இலங்கை தன்னுடைய தேசத்தின் பிடியிலுள்ள நாடு என்ற செய்தியை சொல்ல வருகிறாரா என்ற கேள்வியை அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பியுள்ளனர்.

Comments
Loading...