Designed by Iniyas LTD
சொத்து கணக்கை தெரிவிக்காத எம்பிக்கள்
பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற ஒருவர், 90 நாட்களுக்குள் தனது சொத்து, கடன் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று பாராளுமன்ற சொத்து விதிகள்–2004 கூறுகிறது.
ஆனால்,இதுவரை சோனியா காந்தி, அத்வானி உள்பட 401 எம்.பி.க்கள் சொத்து கணக்கை தெரிவிக்க வில்லை என பாராளுமன்ற செயலகம் கூறி உள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல் :
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விவரம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஒருவர் தகவல் கேட்டு இருந்தார். இந்தகேள்விக்குபாராளுமன்றசெயலகம்பதில்அளித்திருக்கிறது. அதில்401 எம்.பி.க்கள் தங்களது சொத்து கணக்கை தெரிவிக்கவில்லை என கூறி உள்ளது.
சொத்து,கடன் குறித்த விவரங்களை தெரிவிக்காத முக்கிய கட்சிகளின் எம்.பி.க்களின் எண்ணிக்கை பட்டியல் :
பாரதீய ஜனதா– 209, காங்கிரஸ் – 31, திரிணாமுல் காங்கிரஸ்– 27, பிஜூ ஜனதாதளம்– 18, சிவசேனா– 15, தெலுங்குதேசம்– 14, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி–8, அ.தி.மு.க.–9, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்–7, லோக்ஜனசக்தி–6, தேசியவாதகாங்கிரஸ் கட்சி–4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு – 4, சமாஜ்வாடி–4, அகாலிதளம்–3, ராஸ்டீரிய ஜனதாதளம்–3, ஆம் ஆத்மி கட்சி–3, ஐக்கிய ஜனதாதளம்–2, அப்னாதளம்–2.
சொத்து கணக்கு தெரிவிக்காத தலைவர்கள் பட்டியல் :
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், முலாயம் சிங் யாதவின் மருமகள் டிம்பிள் யாதவ், மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் தேவே கவுடா, நடிகை ஹேமமாலினி, பாரதீய ஜனதா மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர், நடிகர் வினோத் கன்னா, பா.ம.க. மூத்த தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் இடம் பிடித்துள்ளனர்.
சொத்து கணக்கு தெரிவிக்காத மத்திய மந்திரிகள் பட்டியல் :
ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், உமாபாரதி, நிதின் கட்காரி, ஹர்சவர்தன், ராதாமோகன் சிங், ஆனந்த் கீதே, அனந்த குமார், ராம்விலாஸ் பஸ்வான், உபேந்திர குஷ்வாகா, கிரண் ரிஜ்ஜூ, கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் தங்கள் சொத்து விவரத்தை தெரிவிக்கவில்லை.
சொத்து கணக்கு தெரிவிக்காத முக்கிய எம்.பி.க்கள் பட்டியல் :
கேப்டன் அமரிந்தர் சிங், வீரப்ப மொய்லி (காங்கிரஸ்), மெஹபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்) உள்ளிட்டவர்கள் இடம் பெறுகின்றனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்….
சொத்து கணக்கு தெரிவிக்காதவர்கள் மீது சொத்துக்கள், கடன்கள் அறிவித்தல் விதிகள் 2004, பிரிவுகள் 5, 6, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 75(ஏ) ஆகியவற்றின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.