Designed by Iniyas LTD
பாகிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 15 தீவிரவாதிகள் பலி
பாகிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 15 தீவிரவாதிகள் பலியாகினர். பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கு இருந்த அப்பாவி மாணவ, மாணவிகள் பலரை சுட்டுக்கொலை செய்தனர்.
இதனையடுத்து தீவிரவாதிகள் மீதான தாக்குதலை அந்நாட்டு ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. இந்தநிலையில் குர்ரம் பழங்குடியின் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள சோதனைச்சாவடி மீது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவம் இதற்கு தக்க பதிலடி கொடுத்து அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்ற தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் பகுதிக்குள் தப்பி ஓடி விட்டனர். இதில் ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார்.