தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் கொல்லப்பட்ட இடத்தில் ஆய்வு

ஆந்திர காவல்துறையினரால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில், தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.anra

தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை ஆணைய குழுக்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அவர்கள் தவிர, பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த உண்மை கண்டறியும் குழுக்களும் சம்பவ இடத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. மனித உரிமைகள் அமைப்பினர் ஆய்வு, மாலை வரை நீடிக்கும் என்று தெரிகிறது.

20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் போது, ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...