Designed by Iniyas LTD
20 தமிழர்கள் சுட்டுக்கொன்ற விவகாரம்: 22ம் தேதி சாட்சிகளிடம் ஆந்திர போலீசார் விசாரணை
ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்கள் தொடர்பான வழக்கில் ஆந்திர போலீசார் நேரடி சாட்சியங்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் பாதுகாப்பில் இருக்கும் 3 நேரடி சாட்சியங்களான சேகர், பாலசந்தர், இளங்கோ ஆகியோரிடம் ஆந்திர ஏடிஎஸ்பி சந்திரசேகரராவ் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நேரடி சாட்சியங்கள் 3 பேரிடமும் மதுரையில் வந்து நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஆந்திராவிற்கு அனுப்ப முடியாது என்றும் மக்கள் கண்காணிப்பகத்தினர் தெரிவித்துள்ளனர்.