Designed by Iniyas LTD
சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட இரு இளைஞர்கள் விமான நிலையத்தில் வைத்து கைது
சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியா சென்ற இரண்டு இளைஞர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த இளைஞர்கள் தலா 8 இலட்சம் ரூபாவை செலுத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர், படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தனர். 30 வயதான இந்த சந்தேக நபர்கள் சிலாபம் உடப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் திகதி சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த முகவர் ஒருவருக்கு தலா 8 இலட்சம் ரூபாவை வழங்கி விட்டு, மேலும் சிலருடன் இணைந்து படகில் எறி அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.
இந்த இளைஞர்கள் அவுஸ்திரேலியாவில் பல்வேறு தொழில்களை செய்து வந்த நிலையில், அந்நாட்டு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.