தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராஜபக்சேவை இலங்கை சுதந்திர கட்சியின் பிரதம வேட்பாளராக நிறுத்த முடியாது: அதிபர் சிறிசேனா

rajapakseஇலங்கை சுதந்திரக் கட்சியில் பிரதம வேட்பாளராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே நிறுத்தப்படமாட்டார் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.  இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன என்ற வகையில் பிரதம வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை நியமிக்க எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 தேர்தலுக்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தறிந்து அதற்கேற்ப பிரதமர் நியமிக்கப்படுவார் என அதிபரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அங்கீகரிக்கவோ, அறிவிக்கவோ இல்லையென அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

Comments
Loading...