தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னை ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்கா பங்கேற்பு!

wawrinka-310சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்புச் சாம்பியனான வாவ்ரிங்கா, எட்டாவது முறையாக பங்கேற்கவுள்ளார்.

20-ஆவது ஆண்டாக நடத்தப்படும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் ஜனவரி மாதம் நான்காம் தேதி தொடங்கி, 10-ந்தேதி வரை நுங்கம்பாக்கம் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

சர்வதேச தரநிலையில நான்காவது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கவுள்ளார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுக்கு தயாராவதற்கு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி முக்கிய களமாக விளங்குகிறது என அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை ஓபனில் பட்டம் வென்றதை தொடர்ந்து. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வென்றதையும் வாவ்ரிங்கா நினைவு கூர்ந்தார்.

Comments
Loading...