தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜப்பானில் 105 வயதான முதியவர் தடகள போட்டியில் புதிய கின்னஸ் சாதனை

old menஜப்பானில் 105 வயதான முதியவர் ஓட்டப் பந்தயத்தில் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜப்பான சேர்ந்த மியாஸகி, நேற்று முன் தினம் தான் 105ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்த நிலையில முதியவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இவர் பங்கேற்றார். 105 வயதினருக்கான பிரிவில், அவர் 42.22 நொடிகளில் இலக்கை எட்டினார்.

இது மூலமா 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்துல மிகக் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய, முதியவர் என்ற தன்னோட முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

 தன்னால் இன்னும் குறைவான நேரத்தில் இலக்கை எட்ட முடியும்னு அவர் நம்பிக்கை தெரிவித்தார். தினசரி பயிற்சி மற்றும் முறையான உணவு பழக்கமே, தமது சாதனைக்கு காரணம்னு 105 வயது தடகள வீரர் மியாஸகி கூறினார். இந்த ஆண்டு பிறந்த நாள் பரிசா அவங்களுக்கு கின்னஸ் சாதனை கிடைத்துள்ளது.

Comments
Loading...