Designed by Iniyas LTD
தமிழக மீனவர்களுக்கு காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடற்படையால் கடந்த 29ம் தேதியன்று கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேருக்கு காவல் நீட்டிப்பு வழங்கி, கற்பிட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் புத்தளம் கடற்பகுதியில் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயணித்த விசைப்படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து, கற்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, வரும் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.