தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாட்டிறைச்சி அரசியல் : ஜம்மு-காஷ்மீரில் இணைய சேவைக்கு தடை

internet-ban-jkஜம்மு – காஷ்மீர்  மாநிலத்தில் மாட்டிறைச்சி அரசியல் விவகாரம் உச்சகட்டத்தை  எட்டியிருக்கிறது. இம்மாநிலத்தில், மாட்டிறைச்சி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில், இணையதள சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இதனை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாட்டிறைச்சி விவகாரத்தில், ஜம்மு-காஷ்மீர்  சட்டப் பேரவையில்  எம்.எல்.ஏ ஒருவர் தாக்கப்பட்ட  நிலையில்  இந்த தடை உத்தரவு  பிறப்பிக்கப்ப்பட்டுள்ளது.

 மாட்டிறைச்சி  விற்பனைக்கு தடை விதித்த உயர் நீதிமன்ற  ஜம்மு கிளையின் உத்தரவை, உச்ச நீதிமன்றம்  சில நாட்களுக்கு முன்பு  இரண்டு மாதங்களுக்கு தளர்த்தியது.

Comments
Loading...