தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை: வாக்காளர் பதிவு செய்துகொள்ள நவம்பர் 12 வரை காலக்கெடு

Ballot-Boxஇலங்கையில் 2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுகளை இம் மாதம் 12 ஆம் திகதி வரை பதிவு செய்து கொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் தமது பதிவுகளை பதிவு செய்து கொள்வதற்கான காலக்கெடு 12 ஆம் திகதியெனவும் அதற்கு பின்னர் பதிவுகளை மேற்கொள்ள முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் உள்ளதா இல்லையா என்று அறிந்து கொள்ள தேர்தல்கள் செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பார்வையிடலாம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...