Designed by Iniyas LTD
எம்.ஜி.ஆர். படித்த நகராட்சி பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று
கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். படித்த நகராட்சி பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது. கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி சன்னதி தெருவில் நகராட்சிக்கு சொந்தமான யானையடி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில்தான் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். படித்தார். இந்த பள்ளியில் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த பள்ளியின் தரம், சுற்றுப்புறசூழல், பள்ளி அமைந்துள்ள இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சென்னை க்விஸ்ட் சார்ட்டிபிகேசன் நிறுவனம் சார்பில் ஐ.எஸ்.ஓ. 9001-2008 என்ற தரச்சான்று வழங்க இப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. அதன்படி குடியரசுதினமான நேற்று இப்பள்ளியில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் க்விஸ்ட் சர்ட்டிபிகேசன் நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் கலந்து கொண்டு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழை நகரசபை தலைவி ரத்னா சேகார் மற்றும் சென்னை நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனார் தண்டபாணி ஆகியோரிடம் வழங்கினார். இவ்விழாவில் நகராட்சி ஆணையாளர் உமாமகேஸ்வாரன், துணைத்தலைவார் ராஜாநடராஜன், நகராட்சி கவுன்சிலர்கள் ராஜூ, முருகன், கோவிந்தராஜன், நகரமைப்பு அலுவலார் பாஸ்கார், நகர் நல அலுவலார் பிரேமா, முன்னாள் நகர அ.தி.மு.க. செயலாளார் சேகார், திரவியம், பள்ளி தலைமையாசிரியை விஜயகுமாரி, ஆசிரியை செந்தாமரை மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் கூறுகையில், “இந்த பள்ளியில் கடந்த 1 வருடத்தில் 8 முறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் மாணவார்களின் வருகை பதிவேடுகள், மாணவார்களின் கல்வி திறன் மற்றும் ஒழுக்கத்திறன், மாணவார்களின் பழக்க வழக்கங்கள், பள்ளி கட்டிடங்களின் தரம், சுகாதாரம், சிறப்பு முதலுதவி பயிற்சி போன்ற பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து இந்த தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது” என்றார்