தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அறிவிப்பு பலகை டி.வி அகற்றப்பட்டதால் பயணிகள் அவதி – சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகை டி.வி.க்கள் அகற்றப்பட்டதால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பகுதி 2–வது நுழைவுவாயில் முன் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு பற்றிய அறிவிப்பு செய்யும் பலகையில் இருந்த எல்.இ.டி. டி.வி. திரை கடந்த 7–ந் தேதி திடீரென உடைந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  Notice-Board-TV

இந்த நிலையில் உள்நாட்டு முனையத்தின் நுழைவுவாயில் முன் அறிவிப்பு பலகையில் இருந்த 16 எல்.இ.டி. டி.வி.க்களும், பன்னாட்டு முனையத்தில் புறப்பாடு பகுதியில் இருந்த 8 எல்.இ.டி. டி.வி.க்களும் அகற்றப்பட்டு உள்ளது. அறிவிப்பு பலகையில் இருந்த டி.வி.க்கள் அகற்றப்பட்டதால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய விமானத்தின் வருகை, புறப்பாடு ஆகியவை பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாமல் அவதியடைந்து உள்ளனர். மேலும், பயணிகளை வரவேற்க வந்தவர்களும் விமானங்கள் தாமதம் குறித்த தகவல்கள் தெரியாமல் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அறிவிப்பு பலகை டி.வி.க்கள் அகற்றப்பட்டதால் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாகவும், இதுகுறித்து விமான நிலைய ஆணையகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அறிவிப்பு பலகையில் உள்ள எல்.இ.டி. டி.வி.க்கள் பராமரிப்பு பணிக்காக அகற்றப்பட்டு உள்ளது. விரைவில் அவற்றை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தனர்.

Comments
Loading...