Designed by Iniyas LTD
ஐ நா வின் விசேட அறிக்கையாளர்கள் இலங்கை வரவுள்ளனர்!
இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் இருவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
சுயாதீன நீதிவான்கள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி மொனிகா பின்டோ மற்றும் சித்திரவதைகள் மற்றும் ஏனைய துன்புறுத்தல்கள், கொடூரமான தண்டனைகள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி ஜூவான் மென்டிஸ் ஆகியோரே எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு ஏற்பாடாகியுள்ளது.
அந்த வகையில் சுயாதீன நீதிவான்கள் மற்றும்சட்டத்தரணிகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி மொனிகா பின்டோ ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் இவர் ஆராயவுள்ளார்.
இலங்கைக்கு இதற்கு முன்னரும் ஐக்கிய நாடுகளின் சில முக்கிய அறிக்கையாளர்கள் விஜயம் மேற்கொண்டு மனித உரிமைகள் மீறள்கள் குறித்து ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.