Designed by Iniyas LTD
சிறிலங்காவில் அமெரிக்கா கடற்படை முகாம்
சிறீலங்கா அரசாங்கம் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுடன் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு சிறீலங்காவில் இரகசிய கடற்படை முகாம்களை அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலே நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வரலாறுகாணாத வகையில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தினதும் ரூபாவினதும் பெறுமதியை ஸ்திரத் தன்மையில் வைத்திருப்பதற்கு அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பை சர்வதேச நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது. நாட்டின் சுயாதீனத்தை இல்லாதொழிக்கும் முகமாக அமெரிக்கா, வடகொரியா போன்ற நாடுகளுக்கு இரகசிய ஒப்பந்தமூடாக கடற்படை முகாம் அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். பல செயற்பாடுகளை முன்னெடுக்க, இவ்வாறுதான் கடன்களையும் வருவாய் களையும் அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக திருகோண மலைத் துறைமுகத்தில் கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. தென்கொரியாவுடன் இராணுவப் பயிற்சிக்காக உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உதவியுடன் கடற்படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது கடற்பாதுகாப்பையும் சர்வதேச ஆலோசனைக்கமைய எடுக்கப்பட்டுள் ளது. இவ்வாறு நாட்டு மக்களுக்கு எந்தவொரு அறிவுறுத்தலுமின்றி தற்போதைய அரசாங்கம் செயற்படுவதானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.