Designed by Iniyas LTD
பிஎஸ்எல்வி மார்க்3 செயற்கைக்கோள் டிசம்பரில் விண்ணில் ஏவப்படும்!
பிஎஸ்எல்வி மார்க்3 செயற்கைக்கோள் டிசம்பரில் விண்ணில் ஏவப்படும் என்று திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.சிவன் கூறினார்.
மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் சங்கத்தில்(மடீட்சியா) நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் பேசியது:
செயற்கைகோள் தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பிஎஸ்எல்வி மார்க்3 வகை செயற்கைக்கோள் நடப்பாண்டு டிசம்பரில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் இஸ்ரோ சார்பில் 30-40 செயற்கைக்கோள்கள் வரை விண்ணில் ஏவப்படும். இதன்மூலம் எதிர்வரும் இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே கணித்து மக்களுக்கு எச்சரிக்கை அளிக்க முடியும்.
இதற்கு சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். இஸ்ரோ மையங்கள் சார்பில் விண்வெளி திட்டத்திற்காக தயாரிக்கப்படும் விண்கலம், ராக்கெட்டுகளுக்கு தேவையான உபகரணங்கள் என அனைத்தும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்தே கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், இதில் தமிழகத்தில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் பங்களிப்பு இதில் குறைவாகவே உள்ளன. இஸ்ரோ மையத்திற்கு தேவையான உபகரணங்களைத் தயாரிப்பதற்கு தமிழக சிறு, குறு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றார்.