Designed by Iniyas LTD
தீபாவளியை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை!
மத்திய மற்றும் சபரகமுவ மாகாணத்திலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கு அந்த மாகாணங்களின் கல்வி அமைச்சுகள் தீர்மானித்துள்ளன.
நாளை மறுதினம் சனிக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் அதனையொட்டி நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளன.
நாளைய விடுமுறைக்கு பதிலாக வருகின்ற சனிக்கிழமைகளில் ஒருநாள் பாடசாலை நடத்தப்படவுள்ளது.