Designed by Iniyas LTD
லசந்த-மகிந்த உரையாடல் ஒலிப்பதிவு அம்பலம்! சிக்கலில் மகிந்த
படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு, பல்வேறு இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளுங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, தெஹிவளை, அத்திட்டய பேக்கரி சந்தியில் வைத்து லசந்த விக்கிரமதுங்க, படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை இடம்பெற்று 8 வருடங்கள் கடந்த பின்னர், இவ்வாறானதொரு ஒலிப்பதிவு அம்பலமாகியுள்ளமை மகிந்தவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.