Designed by Iniyas LTD
ஈழமும் வேண்டாம் சமஷ்டியும் வேண்டாம்! மாகாண முறைமையே போதும்? தமிழ் கட்சிகள் தீர்மானம்
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் அடிப்படையிலேயே தீர்வை எட்டுவது என்பதில் அனைத்து அரசியல் தரப்புகளும் இணக்கம் கண்டுள்ளன. புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டல் குழுவின் கூட்டத்தில் இந்த இணக்கம் நேற்று எட்டப்பட்டது.கட்சிகளுக்கு இடையில் குறிப்பாக ஆட்சியின் பங்காளிக் கட்சியான சுதந்திரக் கட்சியின் போக்கில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்திருந்தன. அரச தலைவரின் முயற்சிகளை அடுத்து சுதந்திரக் கட்சி வழிக்குத் திரும்பியது. அதைத் தொடந்து வழிகாட்டல் குழுக் கூட்டங்கள் மீண்டும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் திசைக்குத் திரும்பியிருந்தன.
நேற்றைய கூட்டத்தில் கூட்டு எதிரணியினர் உள்ளிட்ட அனைத்து அரசியல் தரப்பினரும் கலந்துகொண்டனர். அதிகாரப் பகிர்வு தொடர் பான விடயங்கள் முக்கியமாக அங்கு ஆராயப்பட்டன. சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடல் நீடித்தது.
தொடர்புடைய பதிவு
ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்த, மாகாண முதலமைச்சர்கள் அனைவரும் இணங்கிக்கொண்ட விடயங்கள் தொடர்பான அறிக்கை, கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட தீர்வுப் பொதிகளில் ஒத்திருந்த விடயங்கள் தொடர்பான அறிக்கை என்பவற்றை ஆராய்ந்து அலசியதன் அடிப்படையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதன் அடிப்படையில், அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படையாக மாகாண சபைகளைக் கொள்வது என்று அனைத்துத் தரப்புகளும் இணங்கின. அடிப்படை மாகாண சபைகளாக இருந்தாலும் அவற்றை இணைப்பதற்கான ஏற்பாடுகள் இருக்கக்கூடாது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. ஆனால் வடக்கு – கிழக்கு இணைந்திருக்கவேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தும் வலியுறுத்தப்பட்டது. எனினும் இது தொடர் பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இன்றும் கலந்துரையாடல் தொடர்ந்து இடம்பெறும். அதிகாரப் பகிர்வு குறித்த கலந்துரையாடல் அனேகமாக இன்று இறுதி செய்யப்பட்டு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்து முடிந்தால் இனிவரும் கூட்டங்களில் அரசின் தன்மை, பௌத்த மதத்துக்கான இடம், நிறைவேற்று அரச தலைவர் முறைமை, தேர்தல் முறைமை என்பன தொடர்பான கலந்துரை யாடல் இடம்பெறும் என்று தெரிகிறது.