தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரஷ்யா செல்ல இந்தியா உட்பட 17 நாடுகளுக்கு இனி விசா தேவையில்லை!

201704191125540905_Indians-can-enter-Russia--far-east-without-visa-Dmitry_SECVPFரஷியாவில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த அந்த அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி சுற்றுலா வரும் வெளிநாட்டினரை ‘விசா’ இன்றி அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தினர்.

அதன் பின்னர் இந்தியா மற்றும் 17 தூர கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா மற்றும் வர்த்தகத்துக்காக வரும் போது அவர்களுக்கு ‘விசா’ அனுமதி தேவை இல்லை. என முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஒப்புதலை பிரதமர் மெத்வதேவ் நேற்று வழங்கினார். மேலும், அதற்கான உத்தரவையும் பிற்ப்பித்தார்.

Comments
Loading...