Designed by Iniyas LTD
சிங்களத்தை வானேறி நிலைகுலைய செய்து விண்ணைச்சாடிய வான்கரும்புலிகளின் 5ம் ஆண்டு வீர வணக்க நினைவு நாள்

என்
மண்மேலே நின்று,
என்மேலே
இரத்தம் சிந்தி,
யுத்தம் செய்த வித்தகரே,
கத்த முடியாமல்
சத்தம் போடாமல்-உங்களை
நித்தம் தேடுகிறேன்,
தமிழீழ நாடு
தமிழரின் தாய் வீடென்று
என்மீது தாவி
திரிந்த வீரர்களே,
தனிமையாய் எல்லாம்
வெறுமையாய் தவிக்கிறேன்.
என் கடல் மேலே ஏறி
அலையோடு தாவி
அற்புதங்கள் செய்தவரே-உங்கள்
படகோசை கேட்காமல்
படைவாசம் வீசாமல்
பாவி மகளாய்
பரிதவித்து வாழ்கிறேன்.
அலைகள் மட்டும்
என்னை முட்டிப்போகுது,
அன்று
காடு மலைகள் எல்லாம்-உங்கள்
பாதச்சுவடுகளால்
பசுமையாக்கி சென்றீர்
இன்று
என்னை அழிப்பவர்
கால்பதிக்க,
கூடி அழ யாருமின்றி
குமுறி அழும் என்குரல்
கேட்காமல் போனதோ உங்களுக்கும்.
வாய் நிறைந்த சிரிப்போடு
வானம் ஏறிய வான்புலியே
காற்றிலும் புலி பறக்குமென்று
கண்முன்னே காட்டி விட்டு
கல்வெட்டில் பதிக்கு முன்னே
எங்கு சென்றீர்?
முப்படை கொண்டது
தமிழினம் என்று உலகமே பார்த்தது
மூன்று பிள்ளைகள் எனக்கென்று
நானே மகிழ்ந்தது.
தரைப்பிள்ளை,கடல்ப்பிள்ளை,
வான்பிள்ளை-என்று
தலையே நிமிர்ந்தது-நான்
தமிழீழம் என்று,
எனக்காய் மாண்டு போன
பிள்ளைகளை-நான்
ஆண்டுதோறும் தேடுகிறேன்
20-02-2009
அன்று காற்றில் ஏறி
ரூபனும்,சிரித்திரனும்,
சிரித்தபடி போனார்
பகையின் குகைதேடி
மீண்டும் வரவில்லை என்மடி
இன்றும் தேடுகிறேன்
அருகிருந்த தோழர்களும்-இப்போது என் மடிமீது இல்லை.
விடுதலைக்காய் வீழ்ந்து
என்னுள் புதைந்த பிள்ளைகளோடு
நான் மட்டும் தனிமையாக.
அன்னியரின் அடிமையாக..
சி .கலைவிழி