Designed by Iniyas LTD
இரவில் பதிவுகளை மேற்கொள்ளும் சிறீலங்காபடையினர்
முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு இரவுவேளைகளில் செல்லும் சிறீலங்கா படைகள் குடும்ப விபரங்கள் திரட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இரவு வேளைகளில் வீடுகளுக்குள் படையினர் நுழைவதால் தாம் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முக்கியமாக போரின் போது குடும்பத்தலைவனை இழந்த குடும்பங்கள் இருக்கும் வீடுகளுக்கு சென்று விபரங்கள் திரட்டப்படுவதால் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். விபரங்கள் திரட்ட வரும் படையினரிடம் பகலில் வருமாறு மக்கள் கூறியபோது அவசரமாக தகவல் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மக்கள் சிவில் பாதுகாப்பு அதிகாரியின் கவனத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது..