தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் வாராந்த பத்திரிகை நிறுவனத்தை இலக்கு வைத்து தாக்குதல்

தாக்குதல்

வவுனியாவில் இருந்து வெளிவரும் வாராந்த பத்திரிகை நிறுவனமொன்றினை இலக்கு வைத்து  21.2.14 இரவு 9.30மணியளவில் வெடிபொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள இப்பத்திகை நிறுவத்தில் பணிகளை முடித்துக்கொண்டு அலுவலகத்தை மூடிய சில நிமிடங்களில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்களால் வீசப்பட்ட பொருளொன்றே வெடித்துள்ளதாக தெரியவருகின்றது. எனினும் பத்திரிக்கை  நிறுவனத்தின் முன்னாளல்  இப் பொருள் வீழ்ந்து வெடித்துள்ளமையினால்  எதுவித  சேதஙக்ளும் ஏற்படவில்லை.  இந் நிலையில் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...