Designed by Iniyas LTD
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் யுத்தம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் யுத்தம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிகையினை மொஸ்கோவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் வசிலி நெபன்சியா (Vassily Nebenzia) தெரிவித்துள்ளார்
சிரியாவில் ரசாயன ஆயுதம் உபயோகிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அமெரிக்கா வான் தாக்குதலை சிரியாவில் மேற்கொள்வது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
இந்நிலையில் இது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே யுத்தத்தை ஏற்படுத்தலாம் என மொஸ்கோவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை அபாயத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச சமாதானத்திற்கு பாதகம் ஏற்படும் வகையில், அமெரிக்க செயல்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.