தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதிக்கு நன்றி தெரிவித்து காவடி

வலி. வடக்­கில் 683 ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்­தி­ரி­பால  பிரதமர்  ரணில் மற்றும்   இரா­ணு­வத் தளபதி மகேஸ் சேன­நா­யக்­க­வுக்­கும் நன்றி தெரி­வித்து அவர்­க­ளின் படங்­க­ளைத் தாங்­கி­ய­படி அலகு குத்திஒருவர்   காவடி  எடுத்துள்ளதாக தெர்விக்கப்பட்டுள்ளது.

மயி­லிட்­டி­யைச் சேர்ந்த மு. இன்­ப­ராசா என்­ப­வரே இவ்­வாறு காவடி எடுத்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதி ஆகி­யோ­ரின்  படங்­களைக் கழுத்தில் மாட்­டிக்­கொண்டு  காவ­டி­யு­டன் அவர் நடந்து சென்­றமை பார்ப்­ப­தற்கு விநோ­த­  காட்­சி­யாக இருந்­தது.

28 வரு­டங்­க­ளுக்­குப் பின் எமது சொந்த இடங்­க­ளுக்­குச் செல்­கி­றோம். ஒரு கனவு நன­வா­கி­யது போல உள்­ளதாகவும், . அனை­வ­ருக்­கும் நன்றி செலுத்­தும் வகை­யில்  தான் இதனை ஒரு நேர்த்தியாக செய்துள்லதாகவும் இன்பராசா தெரிவித்துள்ளார்.

 

Comments
Loading...