Designed by Iniyas LTD
தந்தையின் தாக்குதலால் படுகாயமடைந்த 12 வயது சிறுவன்
மாங்குளம் நீதிபுரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது இசைப்பிரியன் என்ற பாடசாலை மாணவன் தந்தையால் தக்கப்பட்டு , இரண்டு கால்களும் முறிந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவன் கடந்த சில நாள்களாக வீட்டிற்கு வராமல் உறவினர் வீட்டில் தங்கி இருந்ததாகவும் நேற்றுக் காலை வீட்டிற்கு சென்ற சிறுவனை அவரது தந்தை தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது..
இதன் காரணம்மாக சிறுவனின் இரு கால்களும் முறிந்த நிலையில், கை, முகம், முதுகு பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை குறித்த சிறுவனின் தந்தை ஏற்கனவே தனது மகளுக்கு அடித்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.