Designed by Iniyas LTD
ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியே பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியே பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும் எனவும் இதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியல்கைதி ஆனந்த சுதாகரனை வெசாக் தினத்திற்கு முன்னர் விடுவிக்க வேண்டுமென பல தரப்பினரும் அழுத்தங்கள் கொடுத்து வந்தநிலையில், புத்தாண்டு தினத்திற்கு விடுவிக்கப்படுவார் என ஜனாதிபதி தெரிவித்திருந்தும் அவர் விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை
கடந்த வாரம் ஜனாதிபதியுடன் உரையாடிய போது, அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை என்பதே தனது நிலைப்பாடு என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியால் விடுவிக்க முடியாது, நீதிமன்றமே விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.