தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா சிறைச்­சா­லை­யில் நடக்­கும் ஊழல் சித்­தி­ர­வதைக்கு எதிராக ஆராப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது

வவு­னியா விளக்­க­ம­றி­யல் சிறைச்­சா­லை­யில் நடக்­கும் ஊழல் சித்­தி­ர­வதை,  போன்­ற­வற்­றுக்கு எதி­ராக வவு­னியா சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கத்­தி­னர் கவனைஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் நேற்றையதினம்  முற்­ப­கல் 11 அள­வில் வவு­னியா நீதி­மன்­றுக்கு முன்­பாக இது நடை­பெற்றுள்ளது.

சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கத் தலை­வர்

தாமா­கவே எதிர்த்­துக் குரல்­கொ­டுக்க முடி­யாத விளக்­க­ம­றி­யல் கைதி­கள் சார்­பிலே, சட்­டத்­த­ர­ணி­க­ளா­கிய தாங்கள்  அந்­தப் பிரச்­சி­னை­களை வெளி உல­குக்­குத் தெரி­யப்­ப­டுத்­தும் முக­மா­கவே,  இந்த ஆர்ப்­பாட்­டத்தை ஒழுங்கு செய்­துள்­ளதாக வவு­னியா சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கத் தலை­வர் மு.சிற்­றம்­ப­லம் ,தெரிவித்துள்ளார்.

விளக்­க­ம­றி­யல் சிறைக்­கூ­டம் வவு­னி­யா­வில் உரு­வாக்­கப்­பட்­ட­தன் நோக்­கம் வட மாகா­ணத்­தி­லி­ருந்து வெளியே செல்ல முடி­யாத மக்­க­ளுக்கு உத­வி­யாக இருக்­கும் என்ற அடிப்­ப­டை­யி­லும்,

அநு­ரா­த­பு­ரம் சென்று தமது உற­வு­க­ளைப் பார்ப்­பது கடி­னம் என்ற கார­ணத்­தி­ற்காகவுமே என அவர் சுட்டிக்காடியுள்ளார்.­

லஞ்சம்

இந்நிலையில் சிறையில் இருக்கும் கைதிகள் வெளி­யில் இருந்து ஒரு தொலை­பேசி அழைப்பை எடுப்­ப­தா­னால் ஒரு நிமி­டத்­திற்கு 100 ரூபாய் கொடுக்க வேண்­டும் என்றும்,

ஒரு வழக்­கிலே தண்­டம் விதிக்­கப்­பட்டு நீதி­மன்ற சிறைக்­கூ­டத்­திலே வைக்­கப்­பட்ட ஒரு­வர் தனக்கு விதிக்­கப்­பட்ட தண்­டப்­ப­ணத்தை செலுத்தி விரை­வாக வெளி­யேற வேண்­டு­மா­னால்,  அங்கு இருக்கும் சிறைக்­கா­வ­ல­ருக்கு நூறு ரூபா கொடுக்க வேண்­டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு  விளக்­க­ம­றி­யல் சிறைச்­சா­லை­யில் எதனை நீதி­மன்­றம் தடுக்க நினைக்­கி­றதோ அது தாரா­ள­மா­கக் கிடைக்­கி­ன்றதாகவும்,  இந்­த­நிலை மாற­வேண்­டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ஏழை­கள் துன்­பு­றுத்­தப்­ப­டு­வ­தும் அவர்­க­ளின் பணம் வஞ்­சிக்­கப்­ப­டு­வ­தும் அவர்­களை வைத்து ஒரு சிலர் பணம் சம்­பா­திக்­கும் நட­வ­டிக்­கை­க­ளும் நிறுத்­த­பட வேண்­டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

மேலும்  பொது­மக்­க­ளி­டத்­தில் விழிப்­பு­ணர்­வும் ஏற்­ப­ட­வேண்­டும் என்­ப­தற்­காவே இந்­தக் கவ­ன­ ஈர்ப்பை மேற்­கொண்­டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோரிக்­கை

தாம்  3 கோரிக்­கை­களை முன்­வைக்­கி­ன்றதாகவும், அதில் ஒன்று   சிறைச்சாலை  கட­மை­யில் ஈடு­ப­டும் அத்­தனை உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் மாற்­றப்­பட்டு புதிய உத்­தி­யோ­கத்­தர்­கள் நிய­மிக்­கப்­பட வேண்­டும்.

இரண்டாவது சிறைச்­சாலை ஆணை­யா­ளர் நாய­கம் ஒரு நம்­ப­க­மான பார­பட்­ச­மற்ற விசா­ர­ணைக் குழுவை அமைத்து சிறைசாலையில்   நடக்­கும் அநீ­தி­க­ளுக்கு சாட்­சி­யங்­கள் மூலம் ஒழுக்­காறு நட­வ­டிகை எடுக்க வேண்­டும்.

மூன்றாவது  இந்த இரண்­டை­யும் அவர்­கள் செய்­யத்­த­வ­றி­னால்  இந்த சிறைச்­சா­லை­யையே அவர்­கள் மூடி­வி­ட­வேண்­டும் என்பதே அவை எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்­க­ளின் தேவைக்கே உரு­வாக்­கப்­பட்­ட சிறைச்சாலையில்   நடக்­கின்ற அநீ­தி­களை தாம  இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வில் முறை­யிட உள்­ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...