Designed by Iniyas LTD
வட மாகாண சபையை மாங்குளம் கொண்டுவரமுடியாமைக்கு காரணம் அரசியல்வாதிகளும் சில அரச உயரதிகாரிகளுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது
வட மாகாண சபையை மாங்குளத்திற்கு கொண்டுவருவது தொடர்பில் தடைகள் என்ன இருக்கின்றது என வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் அவர்களிடம் வினாவியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற பெரும்பான்மையான மாகாணசபை உறுப்பினர்கள் மாங்குளத்திற்கு கொண்டுவருதில் விருப்பமில்லை.
அதேபோன்று திணைக்களங்களில் வேலைசெய்யும் சில உத்தியோகத்தர்களுக்கும் விருப்பம் இல்லை என்பதைதான் குறிப்பிடலாம் என தெரிவித்தார்
மாங்குளத்தில் நீர் இல்லை என்ற காரணத்தை குறிப்பிடுகின்றார்கள் இதற்கு என்ன சொல்கின்றீர்கள் என ஊடகவியலாளர் வினா எழுப்பியபோது,
மாங்குளம் நகரை அண்டிய பகுதிகளில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் ஆழமாகத்தான் இருக்கின்றது நீர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வடக்கில் இருக்கின்ற மிகப்பெரிய கனகராயன்ஆறு மாங்குளம் ஊடகத்தான் செல்கின்றது வவுனிக்குளம் இரணைமடுகுளம் என்பன அண்மித்த பகுதியில் காணப்படுகின்றது.
கனகராயன் ஆற்றின் ஆற்றுப்படுகை மாங்குளம் நகரில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் இருக்கின்றது.
கனகராயன் ஆற்றின் ஊடாக இரணைமடுவிற்கு நீர்கொண்டு சென்று அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர்கொண்டு செல்கின்ற நிலையில் மாங்குளத்தில் நீர் இல்லை என்பது முட்டாள் தனமான கருத்து என்றும் தெரிவித்தார்
இதேவேளை மாங்குளத்தில் இருக்கின்ற நீர்பாசன திணைக்களத்தின் தலைமைக்காரியாலயம் திறப்பது தொடர்பில் வினவியபோது,
திட்டமிட்டபடி நீர்பாசன திணைக்களத்தின் தலைமைக்காரியாலயம் மாங்குளத்தில் அமைந்திருக்கின்றது.
வடமாகாண சபையினுடைய முதலாவது திணைக்களம் பலரது பிரஸ்தாபத்திற்கு உள்ளாகிஇருக்கின்ற நிலையில் முதல் தடவையாக அடுத்த மாதம் அளவில் திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
\அதனை தொடர்ந்து ஏனைய திணைக்களங்களும் மாங்குளத்தை நோக்கி வரவேண்டும்.
இதனை தொடர்ந்து மாங்குளத்தினை நோக்கி வடமாகாணசபையின் தலைமை காரியாலயம் அனைத்தினையும் மாங்குளத்தில் கொண்டுவருவது சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்தாக அமைகின்றது.என்றும் அவர் தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.



