Designed by Iniyas LTD
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழுபிற்கு செல்வதாக கூறிச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழுபிற்கு செல்வதாக கூறிச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சாய்வீதி கொடிகாமத்தை சேர்ந்த சிவராசா உதயகுமார் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி கொழும்பிற்கு சென்றவர் இதுவரை வீடுதிரும்பவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அவரின் உறவினர்கள் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.