தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணா­மல் ஆக்­கப்­பட்­டவர்களின் உற­வு­க­ளுக்கு ஓய்­வூ­தியம் வழங்கப்படவேண்டும் – ஐக்­கிய தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் தலை­வர்

காணா­மற் போன­வர்­க­ளின் உற­வு­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­கும்­வரை மாதாந்­தம் அவர்­க­ளுக்கு ஓய்­வூ­தி­யம் (பென் சன்) வழங்­குங்­கள் என்று ஐக்­கிய தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் தலை­வர் மைத்­திரி குண­ரட்ண தெரிவித்துள்ள்ளார்.

யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் அவர்  இதனை கூறியுள்ளார்.

உள்­நாட்­டுப் போர் முடி­வ­டைந்து 10 ஆண்­டு­கள் ஆகப்­போ­கின்­றன. முகாம்­க­ளில் 13 ஆயி­ரம் பேர் மட்­டுமே இருந்­த­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யா­னால் இங்­குள்ள அர­சி­யல்­வா­தி­கள் என்ன செய்­த­னர்? பெய­ருக்கு மட்­டும் உள்­ள­னரா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காணா­மற்­போ­ன­வர்­க­ளின் உற­வி­னர்­கள் வீதி­க­ளில் பிச்­சைக்­கா­ரர்­கள் போல புகைப்­ப­டங்­களை ஏந்­திப் போராடி வரு­கின்­ற­னர். ஆனால் அவர்­க­ளுக்கு உரிய தீர்வை இங்­குள்ள அர­சி­யல்­வா­தி­களோ அல்­லது அரசோ வழங்­க­வில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்களின்  வறு­மையை முத­லில் போக்­கிவிட்டு  பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்று ஆரா­யுங்­கள் எவவும் அவர் கூறியுள்ளார். அதோடு காணா­மல் போன­வர்­கள் மீள வந்­தால்  அவர்களின்  ஓய்­வூ­தி­யத்தை  நிறுத்­துமாறும்,. அது­வரை அவர்­க­ளுக்கு அதனை வழங்­கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம்  ஆட்­சிக்கு வந்து மூன்று ஆண்­டு­க­ளின் பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான பணி­ய­கத்தை அமைத்­துள்­ளது. இது காலத்தை இழுத்­த­டிக்­கவே உரு­வாக்­கப்­பட்­டுள்­ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்  இது காலத்தை வீண­டிக்­கும் செய­லா­கவே தான்  கரு­து­வதாகவும்,  காணாமல் போடோர்  பணி­ய­கத்­தில் தமக்கு துளி­ய­ள­வே­னும் நம்­பிக்கை இல்லை அவர் இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...