Designed by Iniyas LTD
யாழ் மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட குழு கூட்டம்…
கைத்தொழில் வர்த்தக அமைச்சு அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்களின் அங்குரார்ப்பண விழா தொடர்பான உயர்மட்டக் கூட்டம் யாழ்மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது
இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலர் நா.வேதநாயகம், அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி மொஹிதீன், கைத்தொழில் அபிவிருத்தி சபை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
அடுத்த வாரம் யாழில் கைத்தொழில் வர்த்தக அமைச்சினால் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உதவித் திட்டங்கள், கடனுதவி வழங்கல், மற்றும் தையல் பயிற்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

