Designed by Iniyas LTD
வடமாகாண அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்…
வடமாகாண அமைச்சர்கள் அனைவரும் தாமாகப் பதவியிலிருந்து விலக வேண்டுமென வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்,
மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவினால் வடமாகாண அமைச்சரவைக் கூட்டங்களை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவினால் அமைச்சர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளதாகவும்,
இதனால்,மாகாண அமைச்சரவை முடிவுகளை எடுக்கவோ, சட்டங்களை நிறைவேற்றவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில், அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிப் புதிய அமைச்சர்களை நியமிக்க வழி செய்வது தான் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் மிகச் சிறந்த வழி எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 154 (ஈ) பிரிவின் கீழ் முதலமைச்சரே அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் கொண்டவர்.
ஆளுநர் என்ற வகையில்தனக்கு அமைச்சர்களை நியமிக்கவோ, நீக்கவோ அதிகாரமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.