Designed by Iniyas LTD
யாழில் 50 பேர் கைது..
யாழ் குடாநாட்டில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 50 பேர் கடந்த சில நாட்களில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் போதைப்பொருட்கள் பாவனை, வாள்வெட்டு சம்பவம் மற்றும் வீடுகள் மீதான தாக்குதல்கள் என பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் அதிகமானவர்கள் , யாழில் தவறான செயல்களில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் சில குழுக்களின் இளைஞர்களே எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது