தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாடு முழுவதும் 11 மணித்தியாலத்தில் 3 ஆயிரத்து 99 பேர் கைது…

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட மூவாயிரத்து 99 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணி தொடக்கம் நேற்றையதினம்   காலை எட்டு மணி வரையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வழக்கு தொடரப்பட்டுள்ள நான்காயிரத்து 960 வாகன சாரதிகள் தொடர்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கையில் 13 ஆயிரத்து 780 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.

இதேவேளை குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறான நடவடிக்கைகள்  நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...