தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சோமாலியாவில் கார் குண்டு தாக்குதல் – மூவர் பலி…

சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அரசு அலுவலகம் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த  தற்கொலைப்படை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹாவ்லே வாடாக் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைமை நிர்வாக அலுவலகத்தின் மீது  வேகமாக சென்ற  கார் மோதி வெடித்து சிதறியதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 6 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கார் குண்டு வெடித்து சிதறிய வேகத்தில் அருகாமையில் இருந்த ஒரு பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மசூதி ஒன்றின்  மேற்கூரை மற்றும் சில வீடுகளும்  கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...