Designed by Iniyas LTD
எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு விசா வழங்க இந்திய தூதரகம் மறுப்பு..
இந்தியாவில் நடைபெறவுள்ள பயிற்சி நெறிக்குச் செல்லும் குழுவில்உள்ளடக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு இந்திய தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குஇந்தியாவில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மாகாண சபை உறுப்பினர்கள் இரண்டுகட்டமாக இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சியஉறுப்பினர்கள் இந்தியா ஹைதரபாத்திற்கு இன்று செல்லவுள்ளனர்.
இன்று ஹைதரபாத் செல்லவுள்ள குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின்பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அங்கு செல்வதற்கு அவருக்கான விசா இந்தியத் தூதரகத்தால்மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளாமை குறிப்பிடத்தக்கது.