இந்தியா கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் எந்தவித மாற்றங்களும் இன்றி 143 வது இடத்தில் உள்ளது. சிட்னி மற்றும் நியூயார்க் நகரங்களை மையமாக கொண்ட சமாதானம் மற்றும் பொருளாதாரத்திற்கான நிறுவனம் இந்த புள்ளிவிவர அட்டவணையை தயாரிக்கிறது.
162 உலக நாடுகளைக் கொண்டு ஆய்வுகள் செய்து இந்த அறிக்கை வருடந்தோரும் வெளியிடப்படுகிறது. இம்முறையும் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவாகியுள்ளது. இதில் கடைசி இடம் சிரியாவுக்கு கிடைத்துள்ளது.