சிரியாவில் பாரிய மனிதப்புதைகுழி !

சிரிய படை­யினர், ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற் ­றிய பண்­டைய நக­ரான பல்­மை­ரா­வி­லி­ருந்து சுமார் 42 சட­லங்­களைக் கொண்ட பாரிய மனிதப் புதை குழி­யொன்றை சனிக்­கி­ழமை கண்­டு­பி­டித் துள்ளனர்.
வட கிழக்கு நக­ரான மேற்­படி பிராந்­தி­யத்­தி­லி­ருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்ட அந்தச் சட­லங்­களில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறு­வர்­க­ளது சட­லங்கள் உள்­ள­டங்­கு­கின்­றன.
அவர்­களில் சிலர் தலை துண்­டிக்­கப்­பட்டும் சிலர் துப்­பாக்­கியால் சுடப்­பட்டும் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
அந்த சட­லங்கள் மாகாண தலை­ந­க­ரான ஹொம்­ஸி­லுள்ள இரா­ணுவ மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளன. அவற்றில் சில சட­லங்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளன.
படை­யினர், அர­சாங்க ஆத­ரவு போரா­ளிகள் மற்றும் அவர்­க­ளது உற­வி­னர்­களே இவ்­வாறு கொல்­லப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
பல்­மைரா நகரைக் கைப்­பற்­றிய வேளை ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் குறைந்­தது 280 பேருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­ட­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் கூறு­கி­றது.
அத்­துடன் அந்­ந­க­ரி­லான தீவி­ர­வா­தி­களின் 10 மாத ஆக்­கி­ர­மிப்பின் போது, அங்­குள்ள பண்­டைய கலா­சார முக்­கி­யத்­துவம் மிக்க கட்­ட­மைப்­பு­க­ளுக்கும் கடும் சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது.
இந்நிலையில் சிரிய அலெப்போ பிராந்தி யத்தில் தெற்கே கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்கப் படையினருக்குமிடையே மோதல் கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

ஐ.எஸ். தீவிரவாதிகள்சிரியாபடுகொலைபலிபுதைகுழிமனித எலும்புகள்யுத்தம்
Comments (0)
Add Comment