இந்நிலையில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை பெண்ணிய ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இதனைத்தொடர்ந்து சிவராஜ் சிங் சௌகன் தலைமையிலான மத்திய பிரதேச அரசு சிறுமிகளுக்கு எதிராக பாலியன் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வழிவகை செய்யும்வகையில் சட்டத்தை மாநில சட்டப்பேரவையில் இயற்றியுள்ளது.