ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையிலிருந்து இலங்கையைக் காப்பாற்றுவதற்கு மகிந்த அரசாங்கம் பேய் விரட்டும் சடங்கு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்த பேய் விரட்டும் சடங்கிற்கு கேரள மாநிலத்திலிருந்து ஒன்பது பேயோட்டுபவர்களை தொண்டமானின் நண்பி அனுப்பி வைத்துள்ளாராம். ஜெனிவாவில் இலங்கையைக் காப்பாற்றுவதே இந்தச் சடங்கின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை அடுத்த மாதம் நாடு முழுவதும் இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்திய சதிகளைத் தோற்கடிக்க போதி பூஜைகளை நடத்த ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.