மேற்படி சியாம் கொமர்ஷல் வங்கியின் தீ பாதுகாப்பு முறைமையை மேம்படுத்துவதில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தக்காரர்கள், தவறுதலாக தீ அணைப்பின் போது எரிதலுக்கு அவசியமான ஒட்சிசன் வாயுவை அகற்றப் பயன்படும் வாயுக் கலவையை வெளியிடச் செய்ததால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி இரசாயன வாயுக் கலவையின் வெளியீட்டால் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி அவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த அனர்த்தத்துக்கு ஒப்பந்தக்காரர்களின் கவனயீனமே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்த வங்கியின் ஆவணங்களை களஞ்சியப்படுத்துவதற்கான பகுதியிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட வங்கி கூறுகிறது.
Close