போஸ்டா பொனினோ (56 வயது) என்ற மேற்படி பெண் மருத்துவத்தாதி 2014 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் துஸ்கனி பிராந்தியத்தில் பியொம்பினோ நகரிலுள்ள மருத்துவமனையொன்றில் மேற்படி படுகொலைகளைச் செய்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். அவரால் கொல்லப்பட்ட நோயாளிகள் 61 வயதுக்கும் 88 வயதுக்கும் இடைப்பட்ட வயதுகளையுடையவர்களாவர்.
அவர்கள் அனைவரும் கடும் சுகவீனமுற்றிருந்த போதும் உயிராபத்தான நிலையை எதிர்கொண்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட மருத்துவத் தாதி அவர்களுக்கு குருதி உறைவைத் தடுக்கும் மருந்தை அளவுக்கதிகமாக வழங்கி உடலுக்குள் குருதிக் கசிவை ஏற்படுத்தி அவர்களை படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு இத்தாலிய சுகாதார அமைச்சர் பியற்றைஸ் லொரென்ஸின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
38 நோயாளர்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் டாயியலா பொக்கியலி என்ற மருத்துவத்தாதி கைது செய்யப்பட்டமை உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத் தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.