இலங்கை இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்த போர்க்குற்றத்திற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போரின்போது, படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதுடன், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களும், கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச போர்க்குற்றமாக கருதக்கூடிய அளவிற்கு மனித உரிமை மீறல் நடைபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்றிருப்பது சாதாரண கொலைகள் அல்ல என்றும், அவை சட்டவிரோத படுகொலைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, இதுகுறித்து பன்னாட்டு கலப்பு நீதிமன்ற பொறிமுறையை முன்னிறுத்தும், கலப்பு நீதிமன்ற விசாரணை நடத்துவதையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தாமாகவே நடத்தும் உள்நாட்டு விசாரணையால் எந்த பயனும், பலனும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.