தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

 youth with telant வேலைத்திட்டத்தின் கீழ் நூல் நிலையம் திறந்து வைப்பு..

தீரீஸ்ரார் இளைஞர்  கழகத்தின் மூலம் 2017 ஆம் ஆண்டிற்கான youth with telant வேலைத்திட்டத்தின் கீழ் நூல்நிலையம் அமைக்கப்பட்டது இதன் திறப்பு  விழா18.07.2018 காலை 09.00    மணியளவில் இடம்பெற்றது.

நிகழ்வில் நூல் நிலையத்தினை   விருந்தினராகக் கலந்திருந்த வடமாகாணசபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன்  அவர்கள் பெயர் பலகை திரைநீக்கம் செய்து  நூலக கட்டிடத்தை  நாடா வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து விருந்தினர் உரைகள் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் அவர்கள், திரு.அ.விஜிதரன் (இளைஞர் சேவை அதிகாரி, புதுக்குடியிருப்பு), திரு.இ.ஜீனேஸ் (சமுர்த்தி உத்தியோகத்தர்), திரு.ச.யாசோதரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) இராமர் கோயில் ஐயா சி.சிவகுமார்சர்மா

ஆகியோர் மற்றும் கிராமமட்ட அமைப்பின் உறுப்பினர்கள்  கிராம மக்கள் இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...