Designed by Iniyas LTD
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுதாக்குதலில் 31 பேர் பலி
ஆப்கானிஸ்தான் – காபூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 31 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன.
வாக்காளர்களை பதிவு செய்யும் நிலையமொன்றின் மீது இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்காக வாக்காளர்கள் பதிவு செய்யும் நடவடிக்கை இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , தற்போது வரை 4 தடவைகள் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.